ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் TVK-வா? லீக்கான தகவல்

Published : May 06, 2025, 02:19 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் தளபதியின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் TVK-வா? லீக்கான தகவல்
Vijay Character Name in Jana Nayagan

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எச். வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். வெங்கட் கே நாராயணன் தனது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

24
ஜனநாயகன் படத்தில் விஜய் பெயர் என்ன?

விஜய்யின் விருப்பமான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ஜனநாயகன் படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026-ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் லீக் ஆகி உள்ளது. அதன்படி, 'தளபதி வெற்றி கொண்டான்' என்கிற பெயரில் விஜய் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

34
பச்சைகுத்தி இருக்கும் விஜய்

படத்தில் "Thalapathy Vettri Kondan" என்பதை சுருக்கமாக TVK என்று தன் கையில் விஜய் பச்சைகுத்தி இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தன் கட்சி பெயரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக படத்திலும் அதே பெயரை சூட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும் என கூறப்படுவதால், இதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். 

44
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் அப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இதற்காக அங்கு சென்றிருந்த விஜய் நேற்று சென்னை திரும்பினார். ஜூன் மாதம் இதன் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படம் மூலம் விஜய் 1000 கோடி வசூல் சாதனையைப் படைத்து சினிமாவிலிருந்து விலகுவாரா என்ற கேள்விக்கு விடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம், இப்படத்திற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories