அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா! குழந்தையுடன் எடுத்த க்யூட் போட்டோ இதோ

Published : May 06, 2025, 01:48 PM ISTUpdated : May 06, 2025, 01:53 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து பேமஸ் ஆன கேப்ரியல்லாவுக்கு, இன்று குழந்தை பிறந்துள்ளது. அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
14
அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா! குழந்தையுடன் எடுத்த க்யூட் போட்டோ இதோ
Gabriella Sellus Blessed With a Baby Girl

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. இவர் சுந்தரி சீரியலின் இரண்டு சீசன்களிலும் நாயகியாக நடித்திருந்தார். இதுதவிர இவர் சினிமாவில் நயன்தாரா உடன் ஐரா, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் பெரியளவில் சோபிக்க முடியாததால் அதில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியலில் கவனம் செலுத்த தொடங்கிய கேப்ரியல்லாவுக்கு சுந்தரி சீரியல் நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது.

24
காதல் திருமணம் செய்த கேப்ரியல்லா

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா சுருளி என்பவரை காதலித்து கரம்பிடித்தார். கேப்ரியல்லா சீரியலுக்கு வரும் முன் குறும்படங்களில் நடித்தபோது அதில் கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார் சுருளி. அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் பல்வேறு எதிர்ப்புகளை கடந்து வெற்றிகரமாக திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் கேப்ரியல்லாவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் சுருளி.

34
குழந்தை பெற்றெடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா

இதனிடையே, கேப்ரியல்லா கர்ப்பமாக இருந்ததால் சுந்தரி சீரியல் விறுவிறுவென கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் கேப்ரியல்லாவுக்கு வளைகாப்பும் போடப்பட்டது. இந்த நிலையில், தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டிருக்கிறார் கேப்ரியல்லா. அதன்படி அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்து ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார்.

44
வைரலாகும் கேப்ரியல்லாவின் இன்ஸ்டா பதிவு

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “மகளே... உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே… இவ்வுலகம் உனக்கானது மகளே. சித்ரா அம்மா, மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, அவர்களுக்கு என்னுடைய அடி மனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது அன்பு கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள், இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன். இப்படிக்கு கேப்ரியல்லா” என்று பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories