தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக கோலோச்சியவர்களில் கவுண்டமணியும் ஒருவர். இவர் நடிகர் செந்தில் உடன் சேர்ந்து நடித்த படங்கள் பெரும்பாலானவை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இவர்கள் நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்தும் ரசிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவர் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்து வந்தார். கவுண்டமணியும் செந்திலும் சேந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவை அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.
24
கவுண்டமணி மனைவி சாந்தி மறைவு
பின்னர் வயதானதால் இருவரும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டனர். கவுண்டமணி கடைசியாக ஒத்த ஓட்டு முத்தையா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. படம் தோல்வி அடைந்த சோகத்தில் இருந்த கவுண்டமணிக்கு அவரது மனைவியின் மறைவுச் செய்தியும் பேரிடியாய் அமைந்தது. கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் நேற்று திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
34
கவுண்டமணி - சாந்தி காதல்
மனைவியின் மரணத்தால் கவுண்டமணி மனதளவில் இடிந்துபோய் உள்ளாராம். திருமணத்துக்கு முந்தைய காதலை விட திருமணத்துக்கு பின் வரும் காதல் மிகவும் ஆழமானதாக இருக்கும். அப்படி சாந்தியை திருமணம் செய்த பின்னர் தான் அவரை காதலிக்க தொடங்கினாராம் கவுண்டமணி. திருமணத்துக்கு முன் வரை கஷ்டப்பட்டு வந்த கவுண்டமணிக்கு சாந்தி வந்த நேரம் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தன் மனைவியை ஒரு லக்கி சார்ம் ஆகவே கருதினாராம் கவுண்டமணி.
கவுண்டமணி சினிமாவில் பிசியான நேரத்தில் சாந்தி தான் வீட்டை பொறுப்புடன் கவனித்து வந்தாராம். தான் சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் சாந்தியிடம் கொடுத்துவிடுவாராம் கவுண்டமணி. செலவுக்கு ஏதாவது காசு தேவைப்பட்டால், மனைவியிடம் கேட்டு வாங்கி தான் செலவு செய்வாராம். அதை ஒரு செண்டிமெண்டாகவே பாலோ செய்து வந்திருக்கிறார் கவுண்டமணி. அந்த அளவுக்கு அவர் மீது அன்போடும், பாசத்தோடும் இருந்து வந்தாராம். தற்போது மனைவியின் மறைவால் அவர் சோகத்தில் வாடிப்போய் உள்ளதாக அவரது மேனேஜர் மதுரை செல்வம் கூறி உள்ளார்.
கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர்கள் சத்யராஜ், செந்தில், விஜய், கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு கவுண்டமணிக்கும் ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் கவுண்டமணிக்கு ஸ்மிதா, செல்வி என இரண்டு மகள்களும் உள்ளனர். இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.