வருத்தத்தில் இருந்த நெல்சனுக்கு போன் செய்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..? இது அஜித் ஃபார்முலா வாச்சே..?

Anija Kannan   | Asianet News
Published : Apr 17, 2022, 10:36 AM IST

 Vijay: விஜய் நடிப்பில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்திருக்கிறது. 

PREV
17
வருத்தத்தில் இருந்த நெல்சனுக்கு போன் செய்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..? இது அஜித் ஃபார்முலா வாச்சே..?
beast

விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படம் என்றாலே, தமிழ் சினிமா கொண்டாடி தீர்த்து விடும். வசூலும் கல்லா கட்டும்.ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவல் இருக்கும். அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் தான் கிடைத்திருக்கிறது. 

27
beast

டாக்டர், கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்டெக் நடித்துள்ளார். இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் சில இடங்களில் குறைவாக இருந்தாலும், பல இடங்களில் அதிக விலைக்கு விற்பட்டது.

37
beast

வித்தியாசமான விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றும், காமெடியில் கலந்து கட்டி அடிக்கும் நெல்சன், தற்போது ஆக்ஷனில் பின்னி பிடலெடுத்துள்ளதாக படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். 

47
beast

இருப்பினும், இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை, படம் பல மோசமான விமர்சனங்களையே பெற்று தந்தது. மேலும், படத்தில் பல காட்சிகளில் சுத்தமாக லாஜிக் இல்லை என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

57
beast

இந்நிலையில், பீஸ்ட் படம் விமர்சனத்தால் சோகத்தில் இருந்த நெல்சனுக்கு  தற்போது விஜய் கால் செய்து ஆறுதல் கூறி இருக்கிறாராம். 

67
beast


இது குறித்து விஜய், சினிமா துறையில் வெற்றிகள், தோல்விகள் வருவது சாதாரணம். நீங்கள் விமர்சனங்களை மனதில் வைத்து கொள்ளாதீர்கள், நாம் மீண்டும் ஒரு படம் இணைந்து பணியாற்றலாம் என கூறியுள்ளாராம். 
 

77
beast

இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள், இந்த விஷயத்தில் விஜய், அஜித்தின் ஃபார்முலாவை பின்பற்றுகிறாரோ? என்று கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக, அஜித் நடிப்பில் வெளியான விவேகம் தோல்விக்கு பிறகு, விஸ்வாசம்  ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories