தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி கே.ஜி.எஃப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக வெளியாகின. குறிப்பாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டன.
பிற மாநிலங்களில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அதிகளவில் திரையிடப்பட்டாலும், தமிழ்நாட்டில் விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்படம் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. அதே வேளையில் இதற்கு போட்டியாக வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 300 திரைகளில் மட்டுமே திரையிடப்பட்டன.
பீஸ்ட் படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படத்தைக் காண மக்கள் ஆரவம்காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பீஸ்ட் படத்தை தான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.