நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த போதும், அவருக்கு கோலிவுட்டில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தற்போது பிறமொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி தற்போது இவர் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சுருதி. இதுதவிர பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சுருதி ஹாசன் அவ்வப்போது சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவருக்கு சில ஏடாகூடமான கேள்விகளும் வருவதுண்டு, அதனை வெறுத்து ஒதுக்காமல், அதற்கும் சரியான பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.