நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏராளமான லாஜிக் மீறல்கள் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதைக்களம் காரணமாக இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது.