Beast Review : விஜய்யின் நடிப்பும்... நெல்சனின் திரைக்கதையும் அல்டிமேட் - பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் இதோ

Published : Apr 10, 2022, 01:36 PM ISTUpdated : Apr 13, 2022, 08:46 AM IST

Beast Review : இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள உமர் சந்து என்பவர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். 

PREV
15
Beast Review : விஜய்யின் நடிப்பும்... நெல்சனின் திரைக்கதையும் அல்டிமேட் - பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் இதோ

கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன், தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் தயாராகி இருக்கும் இப்படத்தில் நிர்மல்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : Beast Review : பலவீனமான வில்லன்கள்..! ‘கிரிஞ்ச்’ வசனங்கள்..! பீஸ்ட்டின் பலம் பலவீனம் என்ன..?

25

பீஸ்ட் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. குறிப்பாக யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக இது வெளியாக உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் முன்பதிவு பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

35

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ள உமர் சந்து என்பவர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பீஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.

45

அதில் அவர் கூறியிருப்பதாவது : “பீஸ்ட், அனைத்து அம்சங்களிலும் சிறப்பான திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் நிறம்பிய படைப்பு. எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் முழுமையான புரிதலோடு கதையை விளக்கி உள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி நடிகர் விஜய்யின் நடிப்பு வேறலெவல். 

55

மொத்ததில் பீஸ்ட் ஒரு மிடுக்கான ஆக்‌ஷன் திரில்லராக உள்ளதால் நிச்சயம் உங்களை கவரும். அதன் மால் செட் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ள அவர், இப்படத்திற்கு நான்கு ஸ்டார்களை கொடுத்துள்ளார். அதேவேளையில் இவர் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு 5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Beast : பீஸ்ட்டை போல் வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ..!

Read more Photos on
click me!

Recommended Stories