தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், முப்பரிமாணம், அண்ணாதுரை, காளி, ட்ராபிக் ராமசாமி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
இதில் திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக வந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். முன்னதாக இவர் நடித்த பிச்சைக்காரன் படம் இவருக்கு நல்ல புகழை கொண்டுவர தற்போது பிச்சைக்காரன் 2 தடபுடலாக உருவாகி வருகிறது. அதோடு கோலை, ரதம், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமா துறைக்கு அறிமுகமான இவர், சுக்ரன் படத்தின் மூலம் தனது இசை திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளை உடையில்...கவர்ச்சியால் வெறுப்பேற்றும் ஜான்வி கபூர்...க்யூட் ஹாட் போட்டோஸ்