நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அப்படத்தின் கதை என்ன, அதில் யார் ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்பது குறித்த ஹாட் அப்டேட் தான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவிய வண்ணம் உள்ளது. அதன்படி தளபதி 68 படத்திற்கு சிஎஸ்கே என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் சிஎஸ்கே என்று சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அப்படி இருக்கையில், வெங்கட் பிரபுவின் சிஎஸ்கே-விற்கு முழு பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றனர். வெங்கட் பிரபுவை போல் நடிகர் விஜய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... புதுவையில் லால் சலாம் ஷூட்டிங்... ரஜினியை பார்க்க படையெடுத்து வந்த ரசிகர்கள் - ஸ்தம்பித்து போன பாண்டிச்சேரி