பிரபாஸ்
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பிரபாஸ். பாகுபலி வெற்றியால் இவரது சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இவர் தற்போது ரூ.150 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் இவரது சம்பளம் குறைந்தபாடில்லை.
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தற்போது ஒரு படத்துக்கு ரூ.125 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.
அஜித்
துணிவு படத்துக்கு முன்பு வரை ரூ.100 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்கி வந்த நடிகர் அஜித், அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்துக்காக ரூ.105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
ரஜினி
அண்ணாத்த படத்துக்கு முன்பு வரை ரூ.120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த நடிகர் ரஜினிகாந்த், அப்படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை ரூ.110 கோடியாக குறைத்துக்கொண்டார்.
கமல்
4 ஆண்டுகளாக ஒரு படமும் ரிலீஸ் ஆகாததால் மார்க்கெட் இல்லாமல் இருந்த கமல்ஹாசனுக்கு, அவரது விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி மிகப்பெரிய டிமாண்டை உருவாக்கிவிட்டது. இவர் இந்தியன் 2 படத்துக்காக ரூ.130 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ராம்சரண்
ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ராம்சரணும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாராம். இவர் தற்போது ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் தோல்வியை தழுவினாலும், இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.125 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
அக்ஷய் குமார்
பாலிவுட்டின் பிளாப் ஸ்டார் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் பிளாப் ஆகிவிட்டன. இருந்தபோதிலும் இவர் ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.