கிறிஸ்துமஸ் விருந்தாக... தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள படங்கள் ஒரு பார்வை

First Published | Dec 20, 2022, 12:41 PM IST

ஒவ்வொரு ஆண்டும் இறுதியாக வரும் பண்டிகை கிறிஸ்துமஸ் தான். இதனால் தீபாவளி, பொங்கல் போல் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையிலும் பெரிய நடிகர், நடிகைகளின் படங்கள் ரிலீசாகும். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரண்டு தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. அதில் ஒன்று நயன்தாராவின் கனெக்ட் மற்றொன்று விஷால் நடித்துள்ள லத்தி. இந்த இரண்டு படங்களுமே வருகிற டிசம்பர் 22-ந் தேதி திரைகாண உள்ளது. இதில் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். அதேபோல் விஷாலின் லத்தி படத்தை புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி இருக்கிறார்.

தியேட்டரில் ரிலீசாகும் பிற மொழி படங்கள்

கிறிஸ்துமஸ் வெளியீடாக இந்தியில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்கஸ் (Cirkus) திரைப்படம் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் 18 பேஜஸ் (18Pages) மற்றும் ரவிதேஜா நடித்துள்ள தமாக்கா (Dhamaka) ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. மலையாளத்தை பொறுத்தவரை பிருத்விராஜின் காப்பா (Kaapa) என்கிற திரைப்படம் வெளிவர உள்ளது. கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் வேதா (Vedha) என்கிற படம் ரிலீசாக உள்ளது. 

இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக மணிகண்டா ராஜேஷ் படைத்த சாதனை - எப்புட்ரா என வியந்துபோன ஹவுஸ்மேட்ஸ்

Tap to resize

ஓடிடி-யில் வெளியாக உள்ள தமிழ் படங்கள்

கிறிஸ்துமஸ் வெளியீடாக ஓடிடி-யில் இரண்டு தமிழ் படங்கள் வர உள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் 23-ந் தேதி சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இது ஏற்கனவே தியேட்டரில் ரிலீசான படம். மற்றொரு படம் கதைப்போமா. அசோக் செல்வன் நடித்துள்ள இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி-யில் வெளியாக உள்ள பிற மொழி படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மலையாளத்தில் அமலாபால் நடித்த தி டீச்சர் (The Teacher) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (Jaya Jaya Jaya Hey) திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும் ரிலீசாக உள்ளன. தெலுங்கில் மசூடா (Masooda) திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், இட்லு மாரேடுமில்லி பிரஜானிகம் (Itlu Maredumilli Prajaneekam) படம் ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீசாக உள்ளது. இந்தியில் தாரா வெர்சஸ் பிலால் (Tara Vs Bilal) படம் நெட்பிளிக்ஸிலும், ஆங்கிலத்தில் டாப் கன் மேவ்ரிக் (TopGun Maverick) திரைப்படம் அமேசான் பிரைமிலும், கிளாஸ் ஆனியன் (Glass Onion) திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீசாக உள்ளன.

இதையும் படியுங்கள்...  வழக்கு-லாம் எனக்கு துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி! மீண்டும் போலீசுக்கு சவால்விட்டு சர்ச்சையில் சிக்கிய TTF

Latest Videos

click me!