பாலிவுட் ஹங்காமா ரவுண்ட் டேபிள் 2022: விதவிதமாய், வித்தியாசமாய் உடையணிந்து வந்து கவர்ந்த பிரபலங்கள்!

Published : Dec 20, 2022, 11:20 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள ஜூகு என்ற கடற்கரைப் பகுதியில் உள்ள ஜேடபிள்யூ மரியாட் என்ற பிரமாண்டமான ஹோட்டலில் பாலிவுட் ஹங்காமா ரவுண்ட் டேபிள் 2022 என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர், நடிகைகள் என்று தனித்தனியாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஹோட்டலில் இன்று நடிகைகளுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதில், தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், ஹூமா குரேஷி, பூமி பட்னேகர், ஆலயா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.  

PREV
15
பாலிவுட் ஹங்காமா ரவுண்ட் டேபிள் 2022: விதவிதமாய், வித்தியாசமாய் உடையணிந்து வந்து கவர்ந்த பிரபலங்கள்!

தமன்னா:

மிகவும் எளிமையாக ஜீன்ஸ் உடையில் வந்து தமன்னா கலக்கியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் தமன்னா ஒரு தமிழ் படங்களில் கூட நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். விஷால் நடித்த ஆக்‌ஷன் படமே தமிழ் சினிமாவில் தமன்னாவிற்கு கடைசி படமாக இருந்துள்ளது.
 

25

ரகுல் ப்ரீத் சிங்:

தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

35

ஆலயா:

ஆலயா ஃபர்னிச்சர்வாலா - இவர் தற்போது வரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இது தவிர இன்னும் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படங்கள் வரும் ஆண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45

பூமி பட்னேகர்:

பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை.

55

ஹூமா குரேஷி:

ரஜினிகாந்த் நடிப்பில் வந்த காலா படத்திலும், அஜித் குமார் நடித்த வலிமை படத்திலும் நடித்துள்ளார். இது தவிர மராத்தி, மலையாளம், இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories