Vignesh shivan - Nayanthara : சூப்பரு.... கல்யாணத்துக்கு தயாராகும் விக்கி - நயன்... திருமண தேதியும் முடிவானது

First Published Jan 2, 2022, 9:05 AM IST

துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள விக்னேஷ் சிவன் (Vignesh shivan) - நயன்தாரா (Nayanthara) ஜோடியின் திருமணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக துபாய் சென்றிருந்தனர்.

அங்கு காதலி நயன் உடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வருஷமாவது திருமணம் செய்துகொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சூசகமாக பதில் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில், “யாரெல்லாம் 2-22-22 தேதியில் கல்யாணம் செஞ்சிக்க போறீங்க, நான் அந்த தேதிய மிஸ் பண்ண விரும்பல” என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் சொன்னபடி அடுத்த மாதம் திருமணம் நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் பணியாற்றி உள்ளனர். இப்படமும் அடுத்த மாதம் காதலர் தினத்தையொட்டி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!