தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகை அக்ஷராவும் ஒருவர்.
28
இந்நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை வெற்றிகரமாக விளையாடிய அக்ஷரா, கடந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளில் குறைவான வாக்குகள் கிடைத்த காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.
38
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார் அக்ஷரா.
48
மாடல் அழகியான அக்ஷரா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கன்னடத்தில் வெளியான பில் கேட்ஸ் என்கிற படத்தில் நடித்தார்.
58
இதையடுத்து பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
68
பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, அதில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவரின் ரசிகர் வட்டமும் பெரிதாகி உள்ளது.
78
இந்நிலையில், அக்ஷராவுக்கு அவரது அண்ணன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் விலை ஒரு கோடி ரூபாயாம்.
88
அதன்படி பென்ஸ் சொகுசு கார் அக்ஷராவுக்கு கிப்டாக கிடைத்துள்ளது. அந்த காரின் மீது அக்ஷரா அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.