பிக்பாஸ் வீட்டில் (Biggboss 5 Tamil) இந்த வாரம் மொத்த போட்டியாளர்களும், நாமினேட் செய்யப்பட்ட நிலையில்... புத்தாண்டு தினமான இன்று, மிகவும் எதார்த்தமாக விளையாடி வந்த போட்டியாளர் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் 90 நாட்களை எட்ட உள்ளது. எனவே... பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பல எதிர்பாராத மாற்றங்களும் நடந்து வருகிறது.
25
அந்த வகையில் கடந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் நடைபெற உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
35
மேலும் நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தப்பித்து கொள்ளும் விதமாக Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் வென்றால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவது மட்டும் இன்றி அவர்கள் நேரடியாக, பைனலுக்கும் செல்லலாம்.
45
அனைத்து போட்டியாளர்களும் மும்முரமாக இந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டி போட்ட நிலையில், கடைசியில் யாரும் எதிர்பாராத போட்டியாளரான, வயல் கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்த, போட்டியாளரான அமீர் வெற்றி பெற்றது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.
55
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த வாரம் குறைந்த வாக்குகளுடன் புத்தாண்டு தினமான இன்று வெளியேறியுள்ளது சஞ்சீவ் தான். இவர் தன்னுடைய விளையாட்டை நிறுத்தி தினமாக விளையாடினாலும் அது சேப் கேம் போல் தெரிந்ததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.