உடனடியாக 4 லட்சத்தைக் கொடுத்து கடனை அடைக்குமாறு சொன்னார் நயன்தாரா. இதையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அவர் நடிகை தானே, கொடுக்கலாம் என நினைக்கலாம். ஆனால் அப்படி கொடுப்பதற்கு ஒரு மனசு வேண்டும். அந்த பெண்ணும் நேர்மையாக உழைச்சிருக்காங்க.
நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து வந்தபோது கூட அந்த பணிப்பெண்ணுக்கு தங்க வளையல் போட்டாங்க. நயன்தாரா வசிக்கும் குடியிருப்பை சுற்றி கேமரா இருக்கிறது. நயன்தாராவிடம் கேட்காமல் அந்த பெண் எதையும் செய்ய மாட்டார். யாரா இருந்தாலும் நம்பிக்கையா இருந்தா நல்லது கெட்டதை அவங்க பார்த்துப்பாங்க” என தனது மருமகள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் தாயார்.
இதையும் படியுங்கள்... மகள் பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2-வது குழந்தை... மீண்டும் தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நரேன்