மலையாள நடிகரான நரேன், கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து எஸ்.ஏ.சி இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, தங்கர்பச்சனின் பள்ளிக்கூடம், மிஷ்கினின் அஞ்சாதே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனார் நரேன்.
இவ்வாறு தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வரும் நரேன், கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டே தன்மையா என்கிற மகள் பிறந்தார். தற்போது நரேனின் மகளுக்கு 14 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் தனது 15-வது திருமண நாளன்று தனது மனைவி 2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இருந்தார் நரேன்.