உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி... வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி... போட்டியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர்ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களில் நான்கு பேர் மிகவும் குறைவான வாக்குகளுடன் டேஞ்சர் சோனில் உள்ளதாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நான்கு போட்டியாளர்களும், ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றுள்ளனர். இவர்களில் பிரபல சீரியல் நடிகரும், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டன் தான், மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவேளை மணிகண்டன் வெளியேற வாய்ப்புள்ளதாகவும், எனினும் இடையில் நாளை ஒரு நாள் உள்ளதால்... சில ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் என்ன வேண்டும் என்றாலும் நடக்க கூடும். அதே போல் இந்த வாரம் பலரும் வெளியேறுவார் என எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் தற்போது சேப் சோனில் இருந்தாலும், நாளைய ஒரு நாள் ஓட்டு தான் அடுத்த வாரம் இவர் உள்ளே இருப்பாரா என்பதை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
அதே போல் தற்போது நடிகர் கமல்ஹாசன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், கமல் ஹாசனுக்கு ஓய்வு முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாலும், அவர் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.