அஜித்துக்கு வில்லனாகிறாரா தனுஷ்?... விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 படம் குறித்து காத்துவாக்குல வந்த அப்டேட்

Published : Dec 17, 2022, 04:42 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் தனுஷிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

PREV
14
அஜித்துக்கு வில்லனாகிறாரா தனுஷ்?... விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 படம் குறித்து காத்துவாக்குல வந்த அப்டேட்

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் அஜித். தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

24

துணிவு படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தி வருகிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... உதயநிதி தொட்டதெல்லாம் ஹிட்! 2022ல் ரெட்ஜெயண்ட் வெளியிட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்கள் ஒரு பார்வை

34

அந்த வகையில் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் தனுஷிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறதாம். இதற்கு தனுஷ் மட்டும் ஓகே சொல்லிவிட்டால் ரோலெக்ஸ் சூர்யா ரேஞ்சுக்கு அவரது வில்லன் கேரக்டர் பேசப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

44

அதுமட்டுமின்றி இப்படத்தில் விக்னேஷ் சிவனும் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து விக்னேஷ் சிவன் நடித்திருந்தார். அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தை தயாரித்தவரும் தனுஷ் தான். இவ்வாறு இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால் ஏகே 62-வில் நடிக்க தனுஷ் ஓகே சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்.. தியேட்டரிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்

Read more Photos on
click me!

Recommended Stories