நயன்தாரா -விக்கி காதல் 7 ஆண்டுகளுக்கு பிறகு கல்யாணமாக மலர்ந்தது. நானும் ரவுடி தான் படத்தை படப்பிடிப்பு தளத்தில் மலர்ந்த காதல் இறுதியில் மகாபலிபுரத்தில் மணமாலையாக மாறியது. கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் திரையுல சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொண்டனர்.
ரஜினி தாலி எடுத்துகொடுக்க ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களின் மத்தியில் நடைபெற்ற திருமண விழா ராஜா உபசரிப்போடு நடைபெற்றது. சிவப்பு வண்ண சேலையில் வெள்ளை, பச்சை வண்ண வைரம் பதித்த நகைகளுடன் ஜொலித்தார். மாப்பிளை தங்க நிற மின்னும் உடையில் மணவறையை அலங்கரித்திருந்தார்.
திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து சென்ற தம்பதிகள் அங்கிருந்து அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இறுதியாக நயனும், விக்கியும் மாறி மாறி எடுத்துக்கொண்ட போட்டோசை பகிர்ந்து லைக்குகளை அல்லி இருந்தனர் தம்பதிகள். அதோடு சமீபத்தில் ஹனிமூனில் இருந்து நாடு திரும்பினர்.
திருமணம் சிறப்பாக அமைந்த மகிழ்ச்சியில் உள்ள விக்னேஷுக்கு பரிசாக மற்றோரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றும் விக்னேஷ் அஜித்துடன் ஒரு திட்டத்தை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.