Logic Mistake in Viduthalai 2
வெற்றிமாறன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் விடுதலையும் ஒன்று. அப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விடுதலை முதல் பாகம் அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக் ஒன்றும் தற்போது சோசியல் மீடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Viduthalai 2 Vijay Sethupathi
விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் பிரதான கதாபாத்திரமாக இருந்தாலும். இந்த இரண்டு படங்களிலுமே ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்கள் உள்ளன. கெளதம் மேனன் தொடங்கி ராஜீவ் மேனன், சேத்தன், கென் கருணாஸ், இயக்குனர் தமிழ், இளவரசு என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். அப்படி விடுதலை படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு வெவ்வேறு விதமான கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளார்.
Viduthalai part 2
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் போலீஸாக நடித்திருப்பார் வேல்ராஜ். கெளதம் மேனனுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக வேல்ராஜின் கேரக்டர் இடம்பெற்றிருக்கும். ஆனால் விடுதலை 2ம் பாகத்தில் அதே வேல்ராஜ், பண்ணையாராக நடித்திருப்பார். ஒரே நபரை இரண்டு வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்க வைத்திருப்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதை கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... விடுதலை 2 கிளைமாக்ஸ்: 20 நிமிட காட்சிக்காக 100 நாட்களை வேஸ்ட் பண்ணிய வெற்றிமாறன்!
viduthalai 2 Vetrimaaran
அதில் ஒருவர் வெற்றிமாறனுக்கு முட்டுக் கொடுப்போர் சங்கம் என குறிப்பிட்டு, போலீஸ் வேல்ராஜ், எப்படி பண்ணையார் ஆனார் என்பதற்கு ஒரு கதையை உருட்டி இருக்கிறார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “இரண்டாம் பாகத்துல வர்ற வேல்ராஜ் பண்ணையார் இருக்காரு இல்ல; அவருடைய பையன் தான் முதல் பாக போலீஸ் வேல்ராஜ். பண்ணையார் தன் கிட்ட வேலை செஞ்ச பெண்களில் ஒரு பெண்ணை பதம் பார்க்க; அந்தப் பெண்ணுக்கு பிறந்தது தான் போலீஸ் வேல்ராஜ்.
பண்ணையார் வேல்ராஜ், வேலைக்காரி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவளால் சொத்து பத்தில் பெரிய பிரச்சினையாகும் என்று கருதி அவரை ஊரை விட்டு விரட்டிவிட்டார். போலீஸ் வேல்ராஜ் தனது அம்மா, பண்ணையாரால் விரட்டியடிக்கப்பட்டு சென்னையில் வாழ்ந்து தன்னை வளர்த்த கதையை பிறகுதான் தெரிந்து கொள்கிறார்.
velraj
அதன் பிறகு தன்னுடைய அம்மாவிடம் தான் பிறந்த கதையை கேட்ட போலீஸ் வேல்ராஜ். பண்ணையாரின் அடாவடித்தனங்களை எதிர்க்கவும், அவர் கொட்டத்தை அடக்கவும், பண்ணையார் கூலித் தொழிலாளிகளிடம் காட்டும் வர்க்கபேதங்களை ஒடுக்கவும், சமூக நீதி காக்கவும், முதல் பாக போலீஸ் வேல்ராஜ் போலீஸ் வேலையில் சேர்ந்து, சமூக நீதிக்காக அராஜகத்திற்கு எதிராக போராடினாலும், சிஸ்டம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை லேட் ஆக புரிந்து கொள்கிறார். ஆனாலும் முதல் பாக போலீஸ் வேல்ராஜ் தனது பண்ணையாரப்பாவை தனது அப்பா தான் அவர் என்று பொது வெளியில் சொல்லிக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை” அதனால் தான் வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸாகவும், இரண்டாம் பாகத்தில் பண்ணையாராகவும் காட்டப்பட்டு இருக்கிறார் என்று சொல்லி உருட்டி இருக்கிறார்கள். வெற்றிமாறனுக்கு முட்டுக் கொடுப்போர் சங்கத்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 2 நாளில் காலி பண்ணிய விடுதலை 2!