1500 கோடி வசூலித்தும் தளபதியின் கோட்டையில் மண்ணைக்கவ்விய புஷ்பா 2 - இத்தனை கோடி நஷ்டமா?

Published : Dec 22, 2024, 02:30 PM IST

Pushpa 2 The Rule : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 1500 கோடி வசூலித்திருந்தாலும் கேரளாவில் பிளாப் ஆகி உள்ளது.

PREV
15
1500 கோடி வசூலித்தும் தளபதியின் கோட்டையில் மண்ணைக்கவ்விய புஷ்பா 2 - இத்தனை கோடி நஷ்டமா?
Sukumar, Allu arjun

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புஷ்பா. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சுமார் 3 ஆண்டு கடின உழைப்புக்கு பின்னர் ரிலீஸ் செய்துள்ளனர். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது.

25
Pushpa 2

புஷ்பா 2 திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசையை சாம் சி.எஸ், தமன் ஆகியோர் அமைத்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன புஷ்பா 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஃபயராக உள்ளது. குறிப்பாக ரிலீஸ் ஆன முதல் நாளே ரூ.294 கோடி வசூலித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

35
Pushpa 2 box Office Collection

இதையடுத்து தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வரும் இப்படம். தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதிலும் குறிப்பாக இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷன் தான் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் தான் அதிவேகமாக ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 திரைப்படம் படைத்துள்ளது. இப்படி வசூல் சாதனை படைக்கும் புஷ்பா 2 படம் ஒரு மாநிலத்தில் மட்டும் பிளாப் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?... அதுதான் உண்மை.

இதையும் படியுங்கள்... சினிமாவின் டிரெண்டையே மாற்றிய கேஜிஎஃப், புஷ்பா படங்கள்: எப்படி, ஏன் ஹீரோக்கள் கடத்தல் வேலை செய்றாங்க?

45
Pushpa 2 Flop in Kerala

புஷ்பா 2 திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்த்து கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் அப்படத்தை ரிலீஸ் செய்தனர். இப்படத்தின் கேரள திரையரங்க ரிலீஸ் உரிமை மட்டும் ரூ.20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாம். கேரளாவில் மலையாள நடிகர்களைக் காட்டிலும் அதிக மவுசு உள்ள பிறமொழி நடிகர் என்றால் அது விஜய் தான். அவரது படங்களின் தியேட்டர் ரிலீஸ் உரிமை 25 கோடி வரை விற்பனை செய்யப்படும்.

55
Pushpa 2 Box-office Collections in keral

விஜய்க்கு நிகராக கேரளாவில் மாஸ் காட்ட நினைத்த அல்லு அர்ஜுனுக்கு அங்கு பாக்ஸ் ஆபிஸில் செம அடி விழுந்திருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் கேரளாவில் வெறும் 16 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால், அங்கு அப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் இப்படம் பெரியளவில் லாபம் பார்க்கவில்லை. முதலுக்கு மோசமின்றி தப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2 ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடியா? இது அல்லு அர்ஜூனுக்கு கொடுக்கப்படும் சம்பளமாச்சே?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories