சிவகார்த்திகேயன் உடன் எப்போது காம்பினேஷன், விடுதலை பார்ட் 3 வருமா? சூரி விளக்கம்!

First Published | Dec 22, 2024, 12:23 PM IST

Soori Gives Explanation about Viduthalai Part 3 : விடுதலை 2 படம் பார்க்க வந்த சூரியிடம் சிவகார்த்திகேயன் உடன் எப்போது படம் நடிக்க போறீங்கள் என்று கேள்விக்கு சூரி விளக்கம் கொடுத்துள்ளார்.

Viduthulaia Part 2, Soori

Soori Gives Explanation about Viduthalai Part 3: சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரது நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் 2ஆம் பாகம் 20 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது 2ஆம் பாகமும் வெளியாகி விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

viduthalai 2, Soori

விடுதலை பார்ட் 2 முதலில் நாளில் உலகம் முழுவதும் ரூ.9 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடி வசூல் குவித்தது. 2ஆம் நாளான இன்று விடுதலை பார்ட் 2 உலகளவில் 10 கோடி வசூல் குவித்திருக்கிறது. தமிழத்தில் மட்டும் ரூ.8.5 கோடி வசூல் குவித்து 2 நாட்களில் ரூ.19.25 கோடி வசூல் குவித்து பல சாதனைகளை படைத்துள்ளது. அதோடு 2 நாட்களில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் விடுதலை 2ஆம் பாகம் 11ஆவது இடம் பிடித்துள்ளது.

Tap to resize

Soori, Viduthalai Part 2

இந்த நிலையில் தான் விடுதலை பார்ட் 2 படம் வெளியான போது திருச்சியிலிருந்த சூரி அங்குள்ள சோனா திரையரங்கிற்கு படம் பார்க்க வந்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: விடுதலை பார்ட் 1 படம் எப்படி மக்களுக்கு பிடித்த படமாக இருந்ததோ அதே போன்று தான் விடுதலை பார்ட் 2 படமும் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.

Soori, Viduthalai Part 2

திருச்சி மக்களோடு சேர்ந்து இங்கு வந்து படம் பார்க்க வந்தது மகிழ்ச்சி. மாமன் பட ஷூட்டிங் செல்ல வேண்டி இருக்கிறது. ஈவ்னிங் வந்து பார்க்கிறேன் என்றார். அப்போது தளபதி, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கோஷமிடவே வேண்டாம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து எப்போது படம் நடைக்க போறீங்க என்ற கேட்ட கேள்விக்கு தம்பி சொன்ன உடனே நடிக்க வேண்டியது தான் என்றார். மேலும், ஹீரோவாக என்று கேட்கவே எனக்கு எப்போதும் தம்பி தான் ஹீரோ என்றார். அதோடு இப்போதைக்கு பார்ட் 2 படம் பார்ப்போம். விடுதலை பார்ட் 3 படம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Latest Videos

click me!