பொங்கலுக்கு தள்ளிப்போகும் விடாமுயற்சி... அப்போ குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போ?

Good Bad Ugly Release Date : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில், அவரின் மற்றொரு படமான குட் பேட் அக்லி ரிலீஸ் அப்டேட் கசிந்துள்ளது.

Good bad ugly, Vidaamuyarchi

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றது. அதில் ஒன்று விடாமுயற்சி. அப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Good bad ugly

இதுதவிர நடிகர் அஜித் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகைகள் சிம்ரன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... "பேசவேண்டிய இடத்தில் கட்டாயம் பேசுங்க" - நடிகைகளுக்கு தைரியம் சொல்லிய சன்னி லியோன்!


vidaamuyarchi Pongal Release

இதில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளெடி பெக்கர் போன்ற திரைப்படங்கள் உள்ளதால், விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கி இருக்கிறது. அப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளார்களாம்.

Good Bad Ugly Release Date

அதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன்பே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்போடு தான் பூஜை போட்டனர். ஆனால் தற்போது விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளதால், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. அப்படத்தை பொங்கல் தினத்தில் இருந்து மே மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்களாம். நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று அப்படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith, trisha

5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு அஜித் படங்கள் ரிலீஸ் ஆக உள்ள தகவல் ரசிகர்களை செம்ம குஷியில் ஆழ்த்தி உள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதில் உள்ள மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், இந்த இரண்டு படங்களிலும் நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தளபதியின் கோட்.. கேமியோவில் "கேப்டன்".. படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா?

Latest Videos

click me!