kootathil oruvan
கடந்த 2017ம் ஆண்டு தமிழில் வெளியான "கூட்டத்தில் ஒருவன்" என்கின்ற ரொமான்டிக் காமெடி திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் எழுத்தாளராகவும், இயக்குனராகவும் களமிறங்கியவர் தான் டி.ஜே ஞானவேல். அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறிய பட்ஜெட்டில் அந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது அந்த திரைப்படம். தன்னுடைய முதல் திரைப்படத்தையே மிகவும் ஜனரஞ்சகமாக இயக்கிய ஞானவேல், சுமார் 4 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்த அடுத்த திரைப்படம் தான் "ஜெய் பீம்".
13 வருட காதலியோடு... விஜய் டிவி சீரியல் நடிகருக்கு நடித்த திடீர் திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்ந்து!
Jai Bhim Movie
நடிகர் சூர்யா, நடிகர் மணிகண்டன், நாயகி லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி, இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனது அந்த திரைப்படம். குறிப்பாக "ராஜாக்கண்ணு" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மணிகண்டனின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் மணிகண்டன் மீது இருந்த பார்வையை தலைகீழாக மாறியது என்றே கூறலாம். அதேபோல "செங்கனி" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோசும் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு உதவி இருந்தார்.
Vettaiyan
இந்த இரண்டு திரைப்படங்களை மட்டுமே தான் இயக்கியிருக்கிறார் என்றாலும், இப்போது தனது மூன்றாவது திரைப்படமாக "வேட்டையடன்" என்ற படத்தை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வருகிறார் ஞானவேல். இந்த திரைப்படத்தின் உச்சகட்ட சுவாரசியமாக, முதல் முறை பிரபல நடிகர் அமிதாப்பச்சனை தமிழில் அறிமுகம் செய்த பெருமை ஞானவேலை சேர்ந்திருக்கிறது. பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
கங்குவா திரைப்படமும் இதே நாள் வெளியாகவிருந்த நிலையில், பின் அந்த ரிலீஸ் தேதியிலிருந்து தங்களுடைய கங்குவா திரைப்படம் விலகிக்கொள்வதாக நடிகர் சூர்யாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Director TJ Gnanavel
பல உண்மை சம்பவங்களை கோர்வையாக்கி ஏற்கனவே "ஜெய் பீம்" என்ற திரைப்படத்தை எடுத்து மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் ஞானவேல், தற்பொழுது மீண்டும் சர்ச்சையான ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார். வேட்டையன் திரைப்படம் முடிந்த பிறகு, ஒரு பான் இந்தியா திரைப்படத்திற்கு அவர் திட்டமிட்டு வருகின்றார். தோசை கிங் : மசாலா & மர்டர்ஸ் என்கின்ற தலைப்பில், பிரபல சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறை அவர் திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைகள் நிறைந்த இந்த கதைகளை அவர் எவ்வாறு கையாள போகிறார் என்கின்ற எதிர்பார்ப்புகள் இப்போதே எழுந்துள்ளது.
"பேசவேண்டிய இடத்தில் கட்டாயம் பேசுங்க" - நடிகைகளுக்கு தைரியம் சொல்லிய சன்னி லியோன்!