"பேசவேண்டிய இடத்தில் கட்டாயம் பேசுங்க" - நடிகைகளுக்கு தைரியம் சொல்லிய சன்னி லியோன்!

First Published | Sep 10, 2024, 9:23 PM IST

Sunny Leone : பாலியல் ரீதியான புகார்கள் இப்பொது திரையுலகில் அதிகரித்துள்ளதையடுத்து அது குறித்து தனது கருத்துக்களை பேசியுள்ளார் நடிகை சன்னி லியோன்.

Hema Committee

கேரள திரையுலகம் 

கேரள தலை உலகில் தொடர்ச்சியாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிக அளவில் கொடுக்கப்படுவதாக பெரும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, ஹேமா என்கின்ற நீதிபதியின் கீழ் ஒரு கமிட்டியை அமைத்தார். சில வாரங்களுக்கு முன்பு சுமார் 223 பக்கங்கள் கொண்ட பரபரப்பு அறிக்கை ஒன்றை நீதிபதி ஹேமா தலமையிலான அந்த கமிட்டி வெளியிட்டது. 

அந்த அறிக்கையில் கேரளா திரையுலகில் பெரும் புயலை ஏற்படுத்தியது, இதுவரை 20க்கும் மேற்பட்ட மலையாள திரை உலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது அந்த கலைத் துறையை சேர்ந்த நடிகைகள் பலரும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள திரையுலகில் உள்ள வெகு சில இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், தங்களுடைய படங்களில் நடிக்க வரும் நடிகைகளிடம், வேண்டுமென்று மூத்த காட்சிகள் மற்றும் கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகளில் அதிக ரீடேக் எடுப்பதாகவும். அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளுக்கு இணையாக அவர்களிடம் பாலியல் சேவையை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்... ஜெயம் ரவி மட்டும் எப்படி இந்த மாதிரி படங்களில் நடித்தார்?

Revathy Sampath

சிக்கிய கட்ட துறை 

கேரள திரையுலகை பொருத்தவரை நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகு ரேவதி சம்பத் என்கின்ற நடிகை தான் முதன் முதலில் மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன் வைக்கத் தொடங்கினார். குறிப்பாக மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக், மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகாரை கொடுத்தார். 

அவரை தொடர்ந்து மினு முனீர் என்கின்ற நடிகை, கேரள திரை உலகின் நான்கு முக்கிய நடிகர்களின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கும் நடிகர் ஜெயசூர்யா, நடிகர் முகேஷ் மற்றும் நடிகர் இடைவேளை பாபு உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபோது, கழிவறைக்கு சென்று தான் வெளியே வந்தபோது, நடிகர் ஜெயசூர்யா தன்னை பின்னால் இருந்து கட்டிப்பிடித்ததாகவும், தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் பரபரப்பு தகவலை கூறியிருந்தார்.

Latest Videos


Radhika Sarathkumar

ரஜினி விஜயை தாக்கிய ராதிகா 

இந்த விவகாரம் கேரள திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ் திரையுலக நடிகைகள் பலரும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். குறிப்பாக பிரபல நடிகை ராதிகா சரத்குமார் பேசும் பொழுது "மலையாள திரை உலக சூட்டிங்கில் நடிகைகளுக்கு வழங்கப்படும் கேரவன்களுக்குள் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவர்கள் உடைமாற்றுவது மற்றும் அவர்களுடைய அந்தரங்கம் அனைத்துமே அதில் பதிவு செய்யப்படும்" என்ற ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். 

அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் கேரள திரையுலகம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்ட பொழுது "தனக்கு எதுவுமே தெரியாது" என்று அவர் பதில் கூறிய நிலையில், அது குறித்தும் நடிகை ராதிகாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் "பெரிய நடிகர்கள் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது, அவர்கள் மேல் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்" என்று மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசினார். அது மட்டுமல்லாமல் இப்போது பல நடிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று துடிக்கிறார்கள். அரசியலுக்கு வந்து அவர்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் முன், தங்களோடு இணைந்து நடிக்கும் நடிகிகளுக்காக குரல் கொடுங்கள் என்று சூசகமாக நடிகர் விஜய்யையும் தாக்கி பேசியிருந்தார்.

Prabhu Deva

சன்னி லியோன் 

இப்படி கேரளா திரையுலகம் பற்றியும், திரை துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான பிரச்சினை பற்றியும் தொடர்ச்சியாக பலர் பேசி வரும் நிலையில், இன்று கொச்சியில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய பிரபல நடிகை சன்னி லியோன், இதுகுறித்த தனது கருத்தினை வெளியிட்டு இருக்கிறார். "திரைத்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பெண்களும், நோ சொல்ல வேண்டிய இடத்தில் கட்டாயம் அதை சொல்லியே ஆக வேண்டும். மேலும் தங்களுக்கு வாய்ப்புகளுக்கு பதிலாக பிரச்சனைகள் தான் கிடைக்கிறது என்றால், அந்த இடத்தில் இருந்து வெளியேற கொஞ்சம் கூட அவர்கள் தயங்கவே கூடாது".

"நமது எல்லைகள் என்ன என்பதை நாம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும், அதன் மூலம் நமக்கு சினிமா துறையில் இழப்புகள் ஏற்படுகிறது என்றாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உறுதியுடன் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்று அவர் பேசியிருக்கிறார். அதேபோல இந்த நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோனோடு பங்கேற்ற பிரபல நடிகர் பிரபு தேவாவும் இந்த விவகாரத்தில் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கும் அனைவரும் நீதிக்கும் நியாயத்திற்கும் உட்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இளையராஜா பெண் குரலில் பாடி... பிளாக்பஸ்டர் ஹிட்டான பாட்டு பற்றி தெரியுமா?

click me!