டான்சரும், சீரியல் நடிகருமான அவினாஷ்.. தன்னுடைய 13 வருட காதலியான தெரேசா என்பவரை இன்று கரம்பிடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை இவர் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி வெள்ளி திரை பிரபலங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ... அதே போல் சின்னத்திரை பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் அவினாஷ் பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 13 வருட காதலியை கரம்பிடித்துள்ள தகவலை திருமண புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
26
Avinash Married to Long days Girl Friend
அவினாஷ் சீரியல் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே... சன் டிவியில் ஒளிபரப்பான 'தில்லானா தில்லானா' என்கிற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இதன் பின்னர் 'ஓடி விளையாடு பாப்பா' என்கிற நிகழ்ச்சி இவரை பிரபலமடைய வைத்தது. தன்னுடைய சிறு வயதிலேயே அப்பா - அம்மாவிடம் நான் படித்து விட்டு நடிகராக போகிறேன் என அவினாஷ் கூறிய நிலையில் அதற்க்கு பெற்றோரும் முதலில் படி அப்பறம் நீ நடிகனாவதை பார்க்கலாம் என கூறி ஊக்குவித்தனர்.
சொன்னது போலவே படித்து முடித்தவுடன் ஒரு நடிகராக வேண்டும் என இவர் ஒரு பக்கம் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் நேஷ்னல் லெவலில் ஸ்போர்ட்ஸ் மாற்றம் அத்தலட்ஸில் கலக்கி கொண்டிருந்தார். படிப்பை முடித்த பின்னர், சினிமா வாய்ப்பு ஏதும் கிடைக்காததால்... சீரியலில் வாய்ப்பு தேடினார். அந்த சமயத்தில் தான், ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் நடித்த அழகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அம்மன், சாக்லெட் போன்ற சீரியல்களில் நடித்தார்.
46
Dancer
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில், சைத்ரா ரெட்டியின் தம்பி அன்பு கதாபாத்திரத்தில் முதலில் அவினாஷ் நடித்து வந்த நிலையில்... பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து வெளியேறினார். அவர் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , நடன திறமையை வெளிப்படுத்தி வந்த சமயத்தில் தான், இவருக்கு இரண்டு கால்களிலும் அடிபட்டு... நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய வலியை பொறுத்து கொண்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஃபைனலில் ஆடி பட்டத்தையும் தட்டி சென்றார்.
இந்நிலையில் இவருக்கும், இவருடைய 13 வருட காதலி தெரேசா என்பவருக்கும் சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. ஆனால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இந்த திருமணம் நடந்துள்ளது. அவினாஷ் தன்னுடைய தோழியான தெரேசாவை 9-ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதில் இருந்தே காதலித்து வந்தாராம்... ஆனால் அது காதல் என்பது அவருக்கு புரிய வந்தது 11-ஆம் வகுப்பில் தானாம். அவினாஷ் வீட்டில் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டாலும், தெரேசா வீட்டில்... இந்த பையன் உனக்கு செட் ஆக மாட்டேன் என கூறி துபாய்க்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். ஆனால் துபாய்க்கே சென்று தன்னுடைய காதலியின் பெற்றோர் மனதை மாற்றி ஒருவழியாக இப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இருவரும் இணைந்துள்ளனர்.
66
Avinash Ashok Wedding Photos
இவர்களின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ள நிலையில், ரசிகர்களும் இந்த இளம் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.