‘விடாமுயற்சி’க்காக உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்திய அஜித்... மீண்டும் தொடங்குவது எப்போது?

Published : May 09, 2023, 02:07 PM IST

விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ள நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றூலாவை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதனை பாதியில் நிறுத்தி உள்ளார்.

PREV
14
‘விடாமுயற்சி’க்காக உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்திய அஜித்... மீண்டும் தொடங்குவது எப்போது?

நடிகர் அஜித் பைக் ரைடிங் மீது தீராத காதல் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. அந்த ஆசை தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது. அதன்படி முதல்கட்டமாக நடிகர் அஜித் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து ஏகே 62 படத்தில் நடித்து முடித்த பின் வெளிநாடுகளில் தன்னுடைய பைக் ட்ரிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.

24

ஏகே 62 படத்தின் பணிகள் தாமதம் ஆனதால் உலக சுற்றுலாவை கடந்த மாதம் தொடங்கிய அஜித், முதலாவதாக நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் தனது பைக் ட்ரிப்பை மேற்கொண்டார். அவர் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ‘குஷி'யில் சமந்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் ‘என் ரோஜா நீதான்’ பாடல்

34

நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என பெயரிடப்பட்டு உள்ளதாக அவரது பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளதால், தற்போது அஜித் தனது உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்தி உள்ளார். நேபால் மற்றும் பூட்டானில் தனது பைக் ட்ரிப்பை முடித்த அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

44

இதையடுத்து அஜித் தனது உலக சுற்றுலாவை மீண்டும் எப்போது தொடங்குவார் என கேள்வி எழுந்து வந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அஜித் தனது அடுத்தக்கட்ட உலக சுற்றுலாவை வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைய நவம்பர் மாதம் ஆகும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... போட்ட பிளான் எல்லாம் வேஸ்டா போச்சே.. திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் ஆன ஆதிபுருஷ் டிரெய்லர் - ஷாக்கான படக்குழு

click me!

Recommended Stories