நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 3 படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், அதில் உள்ள பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பின் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
24
அவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
லால் சலாம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றதை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு, அவரின் தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை லால் சலாம் படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது.
44
இந்த போஸ்டர் தான் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் லால் சலாம் போஸ்டரை கிண்டலடித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ‘ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா.. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டதுனு நெனச்சி போய்ட்டு இருந்தேன்... போஸ்டருக்கு கூட தலைவர் தேற மாட்டார் போலயே.. இவனுக எத நம்பி படத்த எடுக்குறானுக” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்பார்த்து டென்ஷன் ஆன ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.