காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் நாக சைதன்யா தொடர்ந்து காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில், அவர் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.