பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வதன் முக்கிய காரணமே, வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான். அந்த கனவு சிலருக்கு நிஜமானாலும், பலருக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமைவதில்லை.
மேலும் ஆரவ் போன்ற சில பிரபலங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தும், சரியான படங்களை தேர்வு செய்யாத காரணத்தால்... தற்போது வரை அவர்களால் வெள்ளித்திரையில் மின்ன முடியவில்லை. அதே நேரம் ஹரிஷ் கல்யாண், ரைசா, கவின், வனிதா விஜயகுமார், ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் கை கொடுத்தது.
அதேநேரம் மற்றொரு தரப்பினர், பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் இருப்பதால்தான் இந்த நிகழ்ச்சியை ஏதோ பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அசீமை தேடி சில வாய்ப்புகள் வந்த போதும், அதனை ஏற்காத அவர்... தற்போது பிரபல சூப்பர் ஹிட் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தான் அசீம் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறாராம்.
இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதை போல் இப்படத்தின் நாயகி, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேடுதல்களும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படியோ அடித்து பிடித்து டைட்டில் கைப்பற்றியது போல், ஒரு ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.