பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். மேலும் இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
24
ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதன் வி.எப்.எக்ஸ் காட்சிகள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. இதனால் மீண்டும் படத்தை மெருகேற்றி தற்போது அதனை ரிலீசுக்கு தயார் செய்து உள்ளனர். ஆதிபுருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை இன்று மாலை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி இதன் டிரெய்லரை உலகமெங்கும் 70 நாடுகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததோடு, இதனை ஒரே நேரத்தில் திரையரங்குகள் மற்றும் யூடியூப்பில் ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகளை செய்து இருந்தது. 3டி தொழில்நுட்பத்தில் ஆதிபுருஷ் டிரெய்லரை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு இருந்தது. அவர்களின் பிரம்மாண்ட பிளான் எல்லாம் தற்போது வேஸ்ட் ஆகி உள்ளது.
44
ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை படக்குழு ரிலீஸ் செய்வதற்கு முன் அது திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளார்களாம். இதனை பார்த்த நெட்டிசன்கள் டீசரை விட டிரெய்லர் நன்றாக இருப்பதாக பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் பகிரப்படும் இந்த டிரெய்லரை நீக்கும் நடவடிக்கைகளையும் படக்குழு துரிதமாக மேற்கொண்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.