தொடர்ச்சியாக "வடசென்னை", "அசுரன்" ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன், இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "விடுதலை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். உண்மையில் இன்று நடிகர் சூரி, முழுமையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்றால், அதற்கு மூலமுதற் காரணம் விடுதலை திரைப்படம் தான். இந்த நிலையில் அந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே விடுதலை படத்தின் இரண்டாம் பாக பணிகளை வெற்றிமாறன் தொடங்கினார். இருப்பினும் சுமார் ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும் அந்த திரைப்படம் குறித்த பெரிய அளவிலான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.
இந்த நிலையில் அண்மையில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்பொழுது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் இணைந்து விடுதலை 2 படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். ஆகவே குறிப்பிட்ட தேதியில் டிசம்பர் மாதம் இறுதியில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் நீளம் கருதி, அதை இரண்டு பாகங்களாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும், ஆகையால் விடுதலை படத்திற்கு மூன்றாம் பாகமும் உள்ளதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது.
கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்த விஜய்யின் மனைவி சங்கீதா; ஏன்?