இழுபறியில் விடுதலை.. அதற்குள் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பா?

Kanmani P   | Asianet News
Published : May 26, 2022, 01:01 PM IST

சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என யூகங்கள் கிளம்பியுள்ளது.

PREV
14
இழுபறியில் விடுதலை.. அதற்குள் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பா?
viduthalai

பரோட்டா சூரியாக வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்த சூரி தற்போது நாயனாக உருவெடுத்துள்ளார். முன்னணி நாயகர்களுக்கு நண்பனாக கலக்கி வந்த இவர் தற்போது பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கம் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

24
viduthalai

விஜய் சேதுபதி மக்கள் போராளியாக நடித்துள்ள  இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம்  சிறுமலையில் நடைபெற்று வருகிறது. பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த படத்தில் சூரிபோலீஸ் ரோலில் வருகிறார். காவலர்களால் மலைவாழ் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தான கதை என சொல்லப்படுகிறது.

34
viduthalai shooting spoot

இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஜெய்பீம் தமிழ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ  கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

44
viduthalai shooting spoot

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  பல முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு வந்துள்ளது விடுதலை. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை இந்நிலையில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories