பெங்காலி மாடலாக இருந்து நடிகையாக மாறிய பிதிஷா டி மஜும்தார் கொல்கத்தாவின் டம் டம் என்ற இடத்தில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்தார். 21 வயதான நடிகை கடந்த 4 மாதங்களாக அங்குள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். மே 25 புதன்கிழமை மாலை, நாகர்பஜார் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து போலீஸார் அவரது உடலை மீட்டனர்.