விஜய்..சூர்யா என மாஸ் காட்டும் லோகேஷ்..விரைவில் வெளியாகும் 'இரும்பு கை மாயாவி' அப்டேட்..

Kanmani P   | Asianet News
Published : May 26, 2022, 10:29 AM IST

விக்ரம் படத்தை அடுத்து சூர்யாவின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதி செய்துள்ளார் லோகேஷ்.

PREV
14
விஜய்..சூர்யா என மாஸ் காட்டும் லோகேஷ்..விரைவில் வெளியாகும் 'இரும்பு கை மாயாவி' அப்டேட்..
suriya -lokesh kanagara

 சூர்யா மற்றும்லோகேஷ் கனகராஜ் ஆகியோர் முதன்முறையாக 'இரும்பு கை மாயாவி' என்ற தலைப்பில் வரவிருக்கும் திட்டத்தில் இணைய உள்ளனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'விக்ரம்' இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில், படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை ஏற்கனவே செய்துவிட்டதாக தெரிவித்தார்.

24
lokesh kanagaraj

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், தி ஸ்டீல் கிளா' என்ற நகைச்சுவை நாவலில் இருந்து ஈர்க்கப்பட்ட தான் இரும்பு கை மாயாவி படத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்க முற்பட்டதாகவும், . அப்போது படம் தயாரிப்பதில் நம்பிக்கை இல்லாததால் படம் உருவாகவில்லை என  தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனராக இருந்த லோகேஷ் இரும்புக் கை மாயாவியின் அளவில் ஒரு படத்தை எடுக்க தன்னம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. 

34
lokesh kanagaraj - suriya

மேலும் இந்த திரைப்படம் குறித்த டிப்ஸ் கொடுத்தக இயக்குனர், இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட், இதில் கதாநாயகன் ஒரு விபத்தில் தனது கைகளில் ஒன்றை இழக்கிறான், பின்னர் உலோகக் கையால் குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறார் என்று குறிப்பிட்டுள்ள இயக்குனர், இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் 8 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.  விரைவில் இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

44
vikram movie

'மாநகரம், கைதி,  மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் இணையவுள்ளதாக இயக்குனரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் இரும்பு கை மாயாவி குறித்த அப்டேட் சினிமா ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories