ரத்தக்களரியான கமலின் விக்ரம்..சென்சார்போர்ட் என்ன சொன்னது தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 26, 2022, 12:14 PM IST

கமல்ஹாசனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான விக்ரம் படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியது. 

PREV
14
ரத்தக்களரியான கமலின் விக்ரம்..சென்சார்போர்ட் என்ன சொன்னது தெரியுமா?
vikram movie

கமல்ஹாசனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான விக்ரம் படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம். இப்படம் ஜூன் 3ஆம் தேதி பெரிய திரைகளில் வெளியாகவுள்ளது.

24
vikram movie

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா காமியோ ரோலில் வருவதாக சொல்லப்படும் இதில்  நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயண் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரமுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

34
VIKRAM MOVIE

பல மொழியில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கமல் உட்பட படக்குழுவினர், உதயநிதி, சிம்பு உள்ளிட்ட திரை பிரபலங்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

44
VIKRAM MOVIE

இந்நிலையில் விக்ரம் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில்  எதிரிவித்துள்ளார். அவரது பதிவில் விக்ரமுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அறிவித்து . கமல்ஹாசன் இடம்பெறும் படத்தின் புதிய போஸ்டரையும்  பகிர்ந்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories