வெற்றிமாறன் சொன்னதும், சார் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதைப் பண்ணுங்க. நான் என்னுடைய டீமிடம் பேசுகிறேன். நீங்க வட சென்னை யூனிவர்ஸில் பண்ணுவது சரியாக இருக்கும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் என்னுடைய குழுவிடம் பேசி, தடையில்லா சான்று வழங்குகிறோம். நீங்க அதற்காக பணமெல்லாம் எதுவும் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்.
நான் யூடியூப்பில் பார்க்கும் போது என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. தனுஷுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் இந்த மாதிரி ஒரு வதந்தியினாலோ அல்லது ஒரு படத்தினாலோ மாறக்கூடியது கிடையாது. சமீபத்தில் கூட எனக்கு பணத்தேவை வந்தபோது ஒரு தயாரிப்பாளர் மூலம் எனக்கு உதவினார் தனுஷ்.
நான் சிம்புவோடு படம் பண்ணுகிறேன் என சொன்னபோது கூட, சார் இது உங்களுக்கு கண்டிப்பா வித்தியாசமான படமா இருக்கும்னு தனுஷ் சொன்னார். சிம்புவும் என்னை நான்கு நாட்களுக்கு முன் சந்திக்க வந்தபோது, பிரதர், தனுஷுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருப்பதாக செய்திகள் பார்த்தேன். நீங்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். உங்களுக்கும் தனுஷுக்கு இடையேயான ஒப்பந்தம் பாதிக்காதவாரு எது செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என சொன்னார்.