ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு எதிர்பார்த்த வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் இம்மாதம் தமிழில் தக் லைஃப் மற்றும் தனுஷ் நடித்த் குபேரா போன்ற பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆனாலும் இரண்டுமே சொதப்பியதால், வெற்றிக்காக ஏங்கி வந்தது தமிழ் சினிமா. இதனால் ஜூன் 27ந் தேதி வெளியான படங்கள் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. இந்த நிலையில், அன்றைய தினம் தமிழில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த மார்கன் மற்றும் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
25
விஜய் ஆண்டனியின் மார்கன்
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் மார்கன். இப்படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா, பிரிகிடா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தரமான திரில்லர் படமாக ரிலீஸ் ஆகி உள்ள மார்கன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதோடு, இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். இதன் படத் தொகுப்பாளராக லியோ ஜான் பால் தான் பணியாற்றி உள்ளார்.
35
மார்கன் பட வசூல்
மார்கன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வசூலில் சற்று மந்தமாகவே இருந்தது. முதல் நாள் இப்படம் இந்தியாவில் வெறும் ரூ.85 லட்சம் தான் வசூலித்து இருந்தது. பின்னர் இரண்டாம் நாளில் பிக் அப் ஆன இப்படம் ரூ. 1.77 கோடி வசூலித்தது. அதில் தமிழில் மட்டும் ரூ.1.35 கோடியும், தெலுங்கில் ரூ.42 லட்சமும் வசூல் ஈட்டி இருந்தது. மூன்றாம் நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் மார்கன் படம் இந்தியாவில் ரூ.1.8 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் மூன்று நாட்களில் ரூ.4.42 கோடி வசூலித்துள்ளது.
இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லவ் மேரேஜ். இப்படத்தில் சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், மீனாட்சி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஷண்முகப் பிரியன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பேமிலி எண்டர்டெயினர் படமாக இது வெளியாகி இருக்கிறது.
55
லவ் மேரேஜ் வசூல்
லவ் மேரேஜ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக பிக் அப் ஆகி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் ரூ.20 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. பின்னர் இரண்டாம் நாளில் ரூ.32 லட்சம் வசூலித்த இப்படம் மூன்றாம் நாளில் ரூ.45 லட்சம் வசூலித்திருக்கிறது. இதுவரை இப்படம் கிட்டத்தட்ட 1 கோடி வசூலித்திருக்கிறது. இருந்தாலும் மார்கன் படத்துடன் ஒப்பிடுகையில் லவ் மேரேஜ் படத்திற்கு மிகக் கம்மியான வசூலே கிடைத்துள்ளது.