திரை உலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரிய அளவில் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்த சாவித்திரிக்கு, கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான "கல்யாணம் பண்ணிப்பார்" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தொடர்ச்சியாக அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு களமிறங்கினார் அவர். அவருடைய திரை வாழ்க்கையில் 138 தெலுங்கு திரைப்படங்கள், 100 தமிழ் திரைப்படங்கள், ஆறு கன்னட மொழி திரைப்படங்கள், 5 ஹிந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் மூன்று மலையாள மொழி திரைப்படங்கள் என்று மொத்தம் 252 திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.