Saroja devi Passes Away: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

Published : Jul 14, 2025, 10:37 AM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார்.

PREV
Saroja devi Passed Away

நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சரோஜா தேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories