பல ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இவர் பிறரை தவறாக பேசுவதும், உச்ச நடிகைகள் பதிலுக்கு பயில்வான் ரங்கநாதனை அவதூறாக பேசுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நடிகை குயிலி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில், நடிகை ஷகிலாவோடு நேருக்கு நேர் வார்த்தை போர் நடத்தினார் ரங்கநாதன். அப்பொழுது பயில்வான் ரங்க நாதனின் மகள் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவர் ஓரினசேர்கையாளர் என்றும் கேள்விப்பட்டதாக ஷகிலா கூறிய நிலையில், என் மகளைப் பற்றி தவறாக பேசாதீர்கள் நாக்கு அழுகிவிடும் என்று ஆதங்கத்தோடு அப்போது பேசியிருந்தார் பயில்வான்.