"நீங்க CWCல் பண்ணது தான் ரிட்டர்ன் வருது" இது தான் கர்மா மணிமேகலை - குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!

Ansgar R |  
Published : Sep 19, 2024, 10:17 PM IST

Anchor Manimegalai : பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து அவர் வெளியிட்ட பதிவும் பெரிய அளவில் வைரலானது.

PREV
14
"நீங்க CWCல் பண்ணது தான் ரிட்டர்ன் வருது" இது தான் கர்மா மணிமேகலை - குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!
Anchor Manimegalai

சின்னத்திரையை பொறுத்தவரை அதில் பயணிக்கும் பிரபலங்களுக்கு, வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவிலான வரவேற்பு இருக்கிறது என்றால் அது சற்று மிகையல்ல. அந்த வகையில் தொடக்க காலத்தில் சன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து, இப்போது விஜய் டிவியில் அசத்தி வரும் தொகுப்பாளினி தான் மணிமேகலை. கடந்த 2010ம் ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது வெள்ளித்திரை படங்களுக்கான இசை வெளியீட்டு விழாவிலும் தொகுப்பாளினியாக பங்கேற்பது உண்டு. இணையவாசிகள் மத்தியில் மணிமேகலைக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளதும் மறுக்க முடியாத உண்மை.

சன் டிவி புது சீரியல்களை அடிச்சு பறக்கவிட்ட சிறகடிக்க ஆசை! இந்த வார டாப் 10 TRP விவரம்!

24
Priyanka

இந்த சூழலில் தான் சில தினங்களுக்கு முன்பு தான் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவதாகவும், தன்னுடைய இந்த கலை பயணத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருப்பதாகவும், ஆனால் ஒருபோதும் தன்னுடைய சுயமரியாதைக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு விஷயமும் நடந்ததில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் தனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்ததால் தான், அதிலிருந்து தான் விலகியதாகவும் கூறியிருந்தார். மேலும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தான் தன்னுடைய வேலைகளில் அடிக்கடி தலையிட்டு, தன்னை மட்டம் தட்டியதாகவும் மனம் நொந்து மிகப் பெரிய பதிவு ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார்.

34
Makapa Anand

இதைத்தொடர்ந்து பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே வார்த்தை தொடங்கியது. இவர்கள் இருவருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ச்சியாக பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அண்மையில் கூட இந்த விஷயம் பற்றி பேசியிருந்த பிரபல தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த், "இது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒரு விஷயம் அல்ல, அவர்களுக்கு உள்ளான விஷயத்தை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள். ஒரு காட்டுக்குள் நாம் செல்லும் பொழுது, அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால், அதை நாம் இடையில் சென்று தடுக்கக்கூடாது. நாம் தான் மிதிபட்டு சாக வேண்டி இருக்கும், அவர்கள் அடித்துக் கொண்டு அவர்களுக்கான வேலையை அவர்கள் செய்து கொள்வார்கள்" என்று காமெடியாக பேசியிருந்தார்.

44
cook with comali season 4

இந்நிலையில் மணிமேகலை ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் தான் "கர்மாவாக" இப்போது அவருக்கு திரும்ப வந்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். தொகுப்பாளியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றி வந்த பொழுது, அப்போது ஆங்கராக இருந்த ரக்சன் மற்றும் நிஷாவை பல நேரங்களில் மணிமேகலை கிண்டல் அடித்திருக்கிறார் என்றும், சிவாங்கி போட்டியாளராக கலந்து கொண்ட பொழுது மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகி, அவருக்கு கோமாளியாக வந்து விடக்கூடாது என்பதற்காகவே மீண்டும் தொகுப்பாளராக அந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் அப்போது பேசப்பட்டது.

இப்படி ஈகோ, அடுத்தவர்களை கிண்டல் அடித்தல், மனம் புண்படும்படி பேசுதல், மதிப்பு இல்லாமல் பேசுதல் என்று பல விஷயங்களை ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை செய்திருப்பதாகவும், இப்போது அது அவருக்கே பூமராங் போல திரும்பி வருவதாகவும் கூறி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

350 கோடி ப்ராஜெக்ட்.. கல்கிக்கே சவால் விடும் ஸ்கிரிப்ட் - ஆனாலும் ட்ராப் செய்த சூர்யா! ஏன்? என்ன படம் அது?

click me!

Recommended Stories