கோலிவுட்டில் தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் பற்றி பார்க்கலாம்.
சினிமாவில் படம் தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தை தயாரித்து அதை சக்சஸ்ஃபுல்லாக ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்கள் படாதபாடு படுகிறார்கள். அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தற்போது ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த படங்களை இயக்கபோகும் இயக்குனர்கள் யார்... யார் என்கிற அப்டேட்டையும் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
25
யார் அந்த தயாரிப்பாளர்?
அந்த தயாரிப்பாளர் வேறுயாருமில்லை ஐசரி கணேஷ் தான். இவர் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தமிழில், கோமாளி, எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட படங்கள் தயாராகின்றன. அந்த படங்களை இயக்கும் இயக்குனர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
35
தனுஷ் - நயன்தாரா படங்கள்
வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன், போர்த் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் படங்களை இயக்குகின்றனர். இந்த படங்களில் எல்லாம் தனுஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளார். இதுதவிர அந்நிறுவனம் சார்பில் தற்போது 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் கெளதம் மேனன் இயக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் ஐசரி கணேஷ், இப்படத்தில் ரவி மோகன் நாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 2018 என்கிற திரைப்படத்தை இயக்கிய ஜூடு அந்தோனி இயக்கத்தில் உருவாகும் படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளாராம். மேலும் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபுவும் இந்நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
55
விஷ்ணு விஷால் உடன் 2 படங்கள்
இதுதவிர விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு படங்களை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். அதில் ஒன்றை கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்குகிறார். மற்றொரு திரைப்படத்தை கனா படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார். மேலும் மெய்யழகன் படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாக உள்ள 96 படத்தின் இரண்டாம் பாகத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் கதையை கேட்ட உடனேயே இயக்குனருக்கு ஐசரி கணேஷ் தங்க செயின் பரிசளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.