தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது இசைஞானி இளையராஜா என்றே சொல்லலாம். அன்னக்கிளியில் தொடங்கிய அவரது இசைப் பயணம் 50 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. காலத்தால் அழியாத பல மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ள இளையராஜா, அண்மையில் லண்டனில் தன்னுடைய முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றி வரலாற்று சாதனை படைத்தார். சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்கிற பெருமையையும் தன்வசப்படுத்தினார் இளையராஜா. அவரை இசைக் கடவுள் என்று தான் ரசிகர்கள் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் இசை பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.
24
இளையராஜா பாடல் ரகசியம்
இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமையாகாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தன்னுடைய பாடல்களால் பல வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தலைமுறையிலும் அவரது பாடல்களைப் பயன்படுத்தினால் படம் சூப்பர் ஹிட் என்கிற டிரெண்டும் உருவாகி உள்ளது. இதனால் இளையராஜாவின் பழைய பாடல்களை போட்டி போட்டு படங்களில் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் ஒரே ஒரு பாடல் தான் உயிர்நாடியாக இருந்தது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.
34
ஒரு பக்கெட் தண்ணியை வைத்து இளையராஜா உருவாக்கிய பாடல்
இளையராஜா இத்தனை ஆண்டுகள் இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வருவதற்கு அவரின் உழைப்பு தான் காரணம். அவர் பெரிய ஹீரோ படங்கள், சின்ன ஹீரோ படங்கள் என பாகுபாடு பார்த்ததில்லை. யாருடைய படமாக இருந்தாலும் அதில் இசை டாப் கிளாஸ் ஆக இருக்க வேண்டும் என நினைப்பார். அந்த வகையில் ஒவ்வொரு பாடல்களுக்கும் மெனக்கெடும் இளையராஜா, ஒரு பக்கெட் தண்ணியை பயன்படுத்தி ஒரு சூப்பர் ஹிட் பாடலை கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுதான் நிஜம். அந்தப் பாடலை உற்று கவனித்தால் தான் அதில் நீரின் ஓசையை இளையராஜா பயன்படுத்தி இருப்பது தெரியும்.
அந்த மெகா ஹிட் பாடல் வேறெதுவுமில்லை. கடந்த 1982-ம் ஆண்டு வெளிவந்த கோழி கூவுது திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடல் தான். இந்தப் பாடலில் இசை மற்றும் ஜானகி, கிருஷ்ண சந்திரன் ஆகியோரின் குரல் ஒருபுறம் இருந்தாலும் பின்னணியில் ஒலிக்கும் தண்ணீர் சத்தமும் ஒரு தனி ஃபீல் கொடுக்கும். சுரேஷ், விஜி ஆகியோர் இந்த பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள். இந்தப் பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருப்பார். இந்தப் பாடல் இன்றும் பலரது பிளே லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும். அதற்கு இளையராஜாவின் மேஜிக் தான் முக்கிய காரணம்.