வீரன் முதல் குட்நைட் வரை... இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

First Published | Jun 30, 2023, 2:49 PM IST

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மாமன்னன் திரைப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளதை போல் ஓடிடியிலும் சில தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன.

வீரன்

ஹிப்ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்திருந்த வீரன் திரைப்படம் கடந்த ஜூன் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சர்வன் இயக்கி இருந்தார். திரையரங்குகளில் வசூலை வாரிக்குவித்த இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் இன்று (ஜூன் 30-ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

குட் நைட்

ஜெய்பீம் பட நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்த திரைப்படம் தான் குட்நைட். விநாயக் சந்திரசேகரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படம் குறட்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இப்படம் இன்று வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ள நிலையில், அதனை இன்று ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... மகள் ஸ்ருதிஹாசனுக்காக குழந்தையாகவே மாறி கமல்ஹாசன் செய்த விஷயம்... இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ இதோ


விமானம்

சிவபிரசாத் யானலா இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருந்த திரைப்படம் தான் விமானம். இதில் சமுத்திரக்கனி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். விமானத்தில் செல்ல வேண்டும் என்கிற தனது மகனின் ஆசை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு ஏழை தந்தையாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

குலசாமி

சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் குலசாமி. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா போப் நடித்திருந்தார். மேலும் போஸ் வெங்கட், மகாநதி சங்கர், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் இன்று டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... எந்த சீரியலுக்கும் கிடைத்திராத அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்... புதிய வரலாறு படைத்த எதிர்நீச்சல் சீரியல்

Latest Videos

click me!