ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன. தற்போதைய நிலவரப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களை பிடிக்க சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 3 விக்கெட்டுகளை மளமளவென விட்டாலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி சென்னை அணியின் பவுலிங்கை துவம்சம் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இந்தப் போட்டியில் வெற்றியடைந்த குஷியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அவரும், வெங்கடேஷ் ஐயரும் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். அவர்கள் இருவரும் ரஜினியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் தனது கனவு நனவானதாக வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!