2023-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் அதற்குள் ஆறு மாதங்கள் விறுட்டென ஓடிவிட்டன. இந்த ஆறு மாதத்தில் தமிழ் சினிமா பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு ஸ்பெஷல் ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வருடம் தான் இளம் இயக்குனர்கள் இயக்கிய படங்கள் வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகின்றன. அப்படி இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.345 கோடி வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
2. வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரூ.306.2 கோடி வசூல் உடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையில் திரைக்கு வந்தது.
3. துணிவு
அஜித் நடித்த துணிவு திரைப்படம் தான் இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இப்படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகி இருந்தது. எச்.வினோத் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 215 கோடி வசூல் ஈட்டியது.
5. விடுதலை பாகம் 1
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் விடுதலை, சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60.6 கோடி வசூலித்து இருந்தது. இது 5-ம் இடத்தில் உள்ளது.
6. போர் தொழில்
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த போர் தொழில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்திற்கு 6-ம் இடம் கிடைத்துள்ளது.
7. பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2. கடந்த மே மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.44 கோடி வசூலித்து ஏழாம் இடம் பிடித்துள்ளது.