Robo shankar, Hansika
ஆதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பாட்னர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கி உள்ளார். இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
partner
அப்போது மேடையில் பேசிய ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதில் அவர் பேசியதாவது : “பாட்னர் படத்தில் உள்ள கிஸ் சீனை ரொம்ப ரசிச்சு என்ஜாய் பண்ணுவீங்க. தனிமையில் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஆவலை தூண்டக்கூடிய காட்சி அது. அதேமாதிரி ஹன்சிகா முதல்ல வா நீ (ஹன்சிகா மோத்வானி) உண்மையிலேயே ஒரு மெழுகு பொம்மை. மைதா மாவை உருட்டி செவத்துல அடிச்சா ஒட்டிக்கொள்ளும், அந்த மாதிரி தான் அவங்க.
நடிகை ஹன்சிகா குறித்து மேடையில் ஆபாசமாக பேசிய நடிகர் ரோபோ ஷங்கர் - வீடியோ இதோ
Hansika
ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவனும், அது தான் சீன். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனா முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்துலாம் கெஞ்சினோம். கட்டவிரலையாச்சும் தடவிக்கிறேன்னு கேட்டோம். முடியாதுனு சொல்லிட்டாங்க. ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை தொட்டி நடிக்கனும், வேற யாரும் தொடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நினைச்சேன்.. ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமா தான் இருக்கனும் போல என கொச்சையாக பேசி இதெல்லாம் நகைச்சுவைக்கே எனக்கூறி தன் பேச்சை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார் ரோபோ சங்கர்.
robo shankar
விமானத்துக்கு நேரம் ஆனதால் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார் ரோபோ சங்கர். அவர் சென்ற பிறகு அவரின் பேச்சுக்கு பத்திரிகையாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்தார். ஒரு சபை நாகரீகம் என்பது தெரியவில்லை என்றால் அது ரொம்ப கேவலம், அவர் நடிப்பதற்கே லாயக்கு இல்லாதவர். அவரையெல்லாம் மேடையில ஏத்தாதீங்க. மேடையில் இருக்கும் ஒரே ஒரு பெண்மணியான ஹன்சிகாவை அவர் எல்லைமீறி பேசி இருக்கிறார்.
இந்த மாதிரி ஆட்களை இனி மேடையில் ஏத்தாதீங்க. காலை தொட்டு பார்க்கனும்னு நீங்க செவத்துக்குள்ள எதுவேணாலும் பேசிக்கோங்க, சபைல பேசுறதால தான் நடிகைகளை சோசியல் மீடியாவில் இழிவா பேசுறாங்க. அதற்கான வழிவகுத்து கொடுக்குறதே இந்த மாதிரி நடிகர்கள் தான். இனி வரும் காலங்களில் இதுபோன்று நாகரீகம் தெரியாதவர்களை மேடை ஏத்தாதீங்க என காட்டமாக கூறினார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார். இதனால் அங்கு சிரிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்.... எளிமையாக நடந்த மெரினா ஆடியோ லான்ச் vs மாவீரன் Pre Release Event - சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி!